ஓய்வூதியம்
ஓய்வூதியம். - உயிர்
ஓய்வுப் பெற்றப் பின்
ஓடிவரும் ஊதியம்.
வாழும் வரை விலாசம் தெரியாது.
விலாசம் தெரிந்ததும் வாங்குபவர்
விழிப்பு இருக்காது.
உயிரோடு இருந்தவரை
உழைத்து விட்டு - அரசு
உத்திரவால் ஓய்வுப் பெற்றதும்
ஓய்வூதியத்திற்காக - அந்த உயிர்
ஓயாமல் அரசுத் துறையை நாடி - தன்
ஓய்வினை நாளெல்லாம் கழிக்கும்.
கழிந்த நாளெல்லாம் கூட்டி
கணக்குப் போட்டு சிறு தொகையை
கைமேல் வாங்குவதற்குள் - அந்த
கைலாயத்தில் ஓய்வெடுக்கும்.
கைலாயத்தில் ஓய்வெடுத்தவருக்கு - அந்த
கைக்காசு இடுகாட்டில் கடைசி ஊதியமாய்
கண்மூடியவருக்கு கிடைக்கும். - இறந்தவர்
ஒருமுறை வாங்குவதற்குள்
பலமுறை உயிரை பக்குவப்படுத்தினார்.
பக்குவமாய் உயிர் பிரிந்ததும் -ஓய்வூதியப்
பணம் மணி ஆர்டரில் மணி அடிக்கும்.