பிரியாதே

என்னை பிரிந்து
செல்லாதே
என் இதயம்
கொத்திய
கொக்கே
நீ
எத்தனை நாள்
காத்திருந்தாய்
இதற்கு?
உனது கண்களினால்
என்னை
விண்வெளியேற்றி
ஆராய்ச்சி செய்ய
வைத்தாய்
காதல் பற்றி!
நீயேன்
வியர்வை
சிந்துகிறாய் ?
பூக்களிலிருந்து
பனித்துளி
விழுவது போலவேய
ிருக்கிறது
எனக்கு!
உன்
கூந்தலை ஏன்
பறக்க விட்டு
செல்கிறாய்
காற்றில்?
பூக்கள் போராட்டம்
நடத்தும்
உன் கூந்தல்
வாசனையை தடை
செய்யென!
உனது
இடையே தான்
பூமியின்
கடையளவு !
உதடுகளை
எச்சில் கொண்டு
நனைக்காதே
சூரிய
வெளிச்சத்தில்
தங்கம்
மின்னுவதாகி
விடும் !
நீ
நடந்து செல்
பரவாயில்லை
ஊர்ந்து செல்லும்
உயிரினமாவது
பூமியிலிருந்து
கொண்டே
சொர்க்கம் காணட்டும்
உன் பட்டு பாதம்
பட்டு !
நீ
ஒரு கணம்
சிரித்து விட்டு
செல்
வருடம் பல கடந்தும்
பாலை வனங்கள்
நீரூற்றாக
கிடக்கும் !
நான் தான் கவிஞன்
ஆகிற்றே
இப்படியே
மையூற்றி எழுதும்
பேனாவில்
பொய்யூற்றி
எழுதுகிறேன்
என்னை பிரிந்து
செல்லாதே !

எழுதியவர் : இரா.இராஜசேகர் (2-Jan-14, 9:25 am)
Tanglish : piriyathe
பார்வை : 312

மேலே