வாழ்த்தும் வணக்கமும் AR ரஹ்மானுக்கு

ஆயிரத்து தொள்ளாயிரத்து
தொண்ணூறு-ஒருவர் மீதுதான்
அதிகம் விழுந்தது கண்ணூறு..!

A .R .ரஹ்மான்..!

அன்று;
முட்களை கடந்து -தந்தார்
ஒரு "ரோஜா"..!
இன்று;
ரோஜா இதழ்களின்-வீதியில்
நடக்கும் ராஜா..!

ஒஸ்காருக்கு இவருக்கு-தேவைப்பட்டது
ஆண்டுகள் இருபத்திரெண்டு...!
இவருக்காக ஒஸ்கார்-காத்திருந்தது
ஆண்டுகள் எண்பத்திநான்கு...!

இன்றைய தமிழன்-மீசை முறுக்க
இவரும் காரணமான ஒருவர்..
இரண்டாயிர வருட தமிழும்-இயையும்
இவர் இசைக்கு-சாட்சி "இருவர்"..!

சிந்தனையெல்லாம் இசையென
கொண்ட இசைஞன்....!
நிந்தனைஎல்லாம் தூக்கி...
எறிந்த கலைஞன் .....!

மௌன பொழுதுகளோ-மனம்
நிறையும் மகிழ்ச்சிப் பொழுதுகளோ
காதுக்குள் ரீங்காரம் இவர் தான்...
இவருக்கில்லை நிகர் தான்.....!

தாலாட்டோ-நல்ல பாராட்டோ;
காதலோ-கனிந்த நட்போ;
ஆன்மீகமோ-அல்லது லௌகீகமோ;
மொத்தத்தையும் உயிரோட்டும் பசையாய்-இவர்
உரு போட்டார் இசையாய்...!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

இனி வரும் நூற்றாண்டில்-மாசு
கலந்துவிடும் காற்றில்..!
இனிய சுவாசம்-தேடும் உலகம்
உங்கள் பாட்டில்...!!

நிச்சயமாய் நீங்கள் சொல்வது போல்
"புகழெல்லாம் இறைவனுக்குத்" தான்-இன்று போலொரு
நாளில் உங்களை தந்ததற்கு....!

ரா.தர்ஷன்..(வாலி)

எழுதியவர் : ரா.தர்ஷன்..(வாலி) (6-Jan-14, 10:55 pm)
பார்வை : 62

மேலே