ஒரே ஒரு எழுத்துப்பிழை
ஒரே ஒரு எழுத்துப்பிழை
என் காதலை புரட்டி போட்டது
அந்த அழகுப் பெண் அதை உண்மை என்று
என்னை விட்டுப் போனாள்
என் வாழ்க்கையில் மன்னிக்க மாட்டேன்
அந்த ஒரு தருணத்தை
வெகுநாள் கழித்து
இன்று அவளை பார்த்தேன்
நான் அன்று சொல்லிய வார்த்தை
நிஜம் தானோ !!!
அது என்ன வார்த்தை
கேளுங்கள் அந்த கொடுமையை
அன்பே உன் அழகு முகம்
ம"ந்"தியை போல இருக்கிறது
என்னை பார்த்து ஒரு முறை சிரி
அதுவே நம் காதலின் திறவுகோல்.
மதி மந்தியாக
மறுத்தாள் மறந்தாள் அந்த மாது
பிள்ளையார் பிடிக்கப் போய்
அது குரங்காய் முடிந்தது
ம்ம் ... ஒரே ஒரு எழுத்துப்பிழை
என் காதலை புரட்டி போட்டது
வாழ்க்கையில் என்னை குனிய வைத்து
கும்மி அடித்தது இந்த குரங்கு