பயணம்

பயணம்
எல்லாவற்றையும்
மாற்றிவிடுகிறது..

நண்பர்களுடனான பயணம்
உற்சாக சிரிப்பினூடனோ
கிண்டல், கேலி நிகிழ்வினிடனோ
கழிகிறது ...

உறவினர்களுடனான பயணம்
பாதுகாப்புனூடனோ
பதற்றத்துடனோ
கழிகிறது..

மனைவியுடனான பயணம்
மத்திமமாகவே
கழிகிறது...

காதலியுடனான பயணம்
கலக்கத்துடனே
கழிகிறது...

அலுவலர்களுடனான பயணம்
அலுவலகமாகவே
கழிகிறது..

தனிமைப் பயணம்
இன்னும் கடினம்..
புத்தகமும்
அலைபேசியுமாக
கழிகிறது..

ஆக..

பயணம்..
வெறும் பயணமாக மட்டுமே இருப்பதில்லை..!
அது பயணமாக இருக்கும் பட்சத்தில்..!!

~ ராஜசேகரன் (கவிரன்)

எழுதியவர் : கவிரன் (10-Jan-14, 10:13 am)
சேர்த்தது : கவிரன்
Tanglish : payanam
பார்வை : 499

மேலே