பிணம் சொல்லும் கவிதை

ஆத்தா
நாக்கு ருசியா தின்னாம நாவடக்கி ...
பச்ச தண்ணி பல்லுல பட்டாலும் நோகுமுனு
பக்குவமா பத்து மாசம் சுமந்து ...
மூச்சடக்கி முழுமையா என்னை இங்க வந்து சேத்தவளே ....
எறும்பு வந்து கடிச்சாலும் ஏழூருக்கு கேக்கும்படி கத்தி ....
சுத்தி இருக்கவங்க கண்ணுபடாம வளத்தவளே ....
முழுமையா என் வயசு இருபது வந்து சேரும்முன்னே
எளும்பொடிந்து போனாயே ...,
எளவு இந்த காதல் வந்து களவு போனது என் இதயம்
பெத்தவக... நி வந்து சொல்லைலே மதிக்காம போனேனே
மத்தவங்க வந்து இப்போ மலர் தூவ ஊர்வலமா போறேனே ... !

எழுதியவர் : கவிப் பறவை (10-Jan-14, 4:37 pm)
பார்வை : 131

மேலே