காதலில் சுகம் காத்திருப்பது
நிலவு தேய்ந்து
இரவு நீண்டது
என் உயிரும் கரைந்தது
உன் நினைவால்.....
காதலில் சுகம்
காத்திருப்பது
காத்திருப்பதே என்
காதலானது....
அமைதியான உலகம் அழகுதான்
ஆனல் காதலில் அமைதி
பல உலகபோர்களை
நடத்தி முடித்துவிடும் மனதில்....
என்றோ பேசும் அந்த ஒருசில
வார்த்தைகளுக்காக
இன்று மௌனமாய் யோசிக்கிறாயோ....
மௌனத்தை திர
மறந்திருக்கும் உன் காதல்
மகிழ்ச்சி பெரும்
தனித்திருக்கும் என் காதல்
உயிர் பெற்று உலா வரும் உன்னால்