மழை ஏக்கம்
கடலும் கதிரவனும்
கூடி வந்த கர்ப்பமோ!
இடிமுழக்கம் என்பது
கருவில் மோதும் சத்தமோ!
குளிர்ந்த காற்று வீசினால்
பிரசவித்துக் கொட்டுமோ!
காதல் மிகுதி ஆய்விடின்
ஆர்ப்பரித்தல் இன்பமோ!
வயது கூடிப்போனதோ
வாழ்ந்த சுகம் மறந்ததோ!
ஊடல் வந்து கொண்டதோ
கூடல் என்பது இல்லையோ!
வறட்சி தந்து போவதோ
மீட்சிதனை சொல்லுமோ!