தைத் திருநாள்

கிராமத்து மண் வாசனையை
நாம் நுகரும் ஒரு நன் நாள்
செந்நெல் கதிரில் மனி அரிசி
செப்புடன் நல்ல மண் பானை
செங்கரும்பு தளிர் மஞ்சள்
உவமையோடு உழவர் மகன்
ஏழு போகம் விளைஞ்ச மகிழ்சி
ஏர் உழவன் உண்மை காட்சி
பெண்டிர்கள் குலவை ஓசை
சந்தோஷ முகங்கள் கொண்டு
பொங்கி வரும் பானை சோறு
தங்கும் மனதில் பெருமிதமாய்
தைத் திருநாள் இன்று வசந்தம்
உழவர் மகன் இதயம் குளிரும்
பொங்கலோ பொங்கல் ! என்று
கொண்டாடும் தைத் திருநாள் !
தமிழ் திருநாள் !
தரணி போற்றும் பெருநாள் !
ஸ்ரீவை.காதர்.