காதலென்னும் சோலையினில்42

கவிதாவின் அப்பா இப்படி கல்யாணம் வேண்டாம் என்று சொன்னதும் அனைவருக்குமே அதிர்ச்சிதான்.............


என்ன மாமா சொல்றீங்க? இங்க வந்ததும் கவிதா இப்படி மனசு மாறிவிட்டாள்; என்று கவலையுடன் சொல்ல, அம்மாவும் ஆமா! சம்பந்தி கவிதா வீட்டில் வைத்து சம்மதம் சொன்னதால தான் இவ்ளோ துரம் உங்களையும் அழைத்து செல்ல வந்தோம் என்று சொல்லி வருத்தப்பட்டார்கள்...........


கவிதாவை கூப்பிடுங்கள் கேட்போம்! என்று ராஜாவின் அம்மா சொல்ல அதற்குள் கவிதாவும்,ராஜலெக்ஷ்மியும், குட்டி ராஜாவும் உள்ளே வந்தனர்....


ராஜாவின் அம்மா கவிதாவிடம் என்னம்மா இப்படி பண்ணிட்டா அப்பா சொல்றது உண்மையா?உனக்கு உங்கள் திருமணத்தில் விருப்பம் இல்லையா என்று கேட்டாள்...............


கவிதா சிரித்துக்கொண்டே,,,,,,,, இப்போது வேண்டாம் அத்த ராஜலெக்ஷ்மிக்கு ஒரு நல்ல வரனா பார்த்து பேசி முடிச்ச பிறகு எங்களுக்கு பண்ணலாம் என்று சொன்னாள்.........


இதான் உன் பிரச்சனையா நானும் பயந்துட்டேன் என்று சொல்லி சமாதானம் அடைந்தார்கள்......


அம்மா நானும் ராஜலெக்ஷ்மி திருமணத்தை பற்றிதான் பேச வந்தேன் என்று சொன்ன ராஜாவிடம், கண் ஜாடையில் அப்பா பேசட்டும் என்று கூறினாள் கவிதா.......


சரி என்று ராஜாவும் மௌனமானான்.


என்னடா சொல்லு என்று ராஜாவின் அம்மா வற்புறுத்த மாமா சொல்லுவாங்க என்று சொல்லிவிட்டு, கவிதா ராஜலெக்ஷ்மியை வெளியே அழைத்து செல் என்று சொன்னான்........


என்ன அண்ணா என்ன தெரியாம என்னெல்லாமோ பண்றீங்க, ம்....வந்து கவனிக்கிறேன் என்று சொல்லிவிட்டு மறுபடியும் வயலுடன் கூடிய தோட்டத்திற்கு இருவரும் குழந்தையுடன் சென்றார்கள்..........


தாராவின் வீட்டு முன் வந்த ஜீப்பிலிருந்து 2,3 போலிஸ்காரர்கள் உள்ளே வந்தார்கள் அவர்களை பார்த்ததும் தாராவும் அவளின் அம்மாவும் என்னவோ! ஏதோ! என்று பரபரப்படைந்தார்கள்.........


என்ன சார்? என்று பதற்றமாக கேட்டாள் தாராவின் அம்மா!

ம்....எல்லாம் உங்க பொண்ணு பண்ற வேலைதான் என்று தாராவை கைகாட்டினார் தலைமை போலிஸ் அதிகாரி..........




தொடரும்...........

எழுதியவர் : (21-Jan-14, 1:05 pm)
பார்வை : 219

மேலே