+முத்தங்களால் யுத்தம் செய்+

கோபமாய்
என்னை முறைத்த‌
மிளகாய் விழிகளை கட்டு

ஆத்திரமாய்
வார்த்தைகளை உதிர்த்த‌
பாகற்காய் நாவினை விட்டு

வெகு நாட்களாய்
உனக்காய் காத்திருக்கும் இதயத்தினை
உன் மல்லிகை சிரிப்பினால் தொட்டு

ஆரம்பித்துவிடு
நீயுமொரு யுத்தம்..

முத்தங்களால் மட்டும்....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-Jan-14, 8:19 pm)
பார்வை : 153

மேலே