காதலென்னும் சோலையினில்44

தலைமை போலிஸ் அதிகாரி கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் பேச ஆரம்பித்தாள் தாரா...........


சார்! நீங்க என்ன நினச்சாலும் சரி, அவன் எப்படி பட்டவன் என்றெல்லாம் எனக்குத்தெரியாது! ஆனால் அவன்கிட்ட நான் பழகுறது சும்மா தோழியாகதான் என்று கூறினாள்.


தாராவின் இந்த பேச்சு அவரை மிகவும் கோவப்படுத்தியது எதற்காக! இப்படி நடிக்கிறாய்? உங்களுக்குள் எனவோ இருக்கிறது உண்மையை நீயே சொன்னால் நல்லா இருக்கும்; இல்லையென்றால்! நடக்குறது வேறு என்று மிரட்டினார்,,,,,,,,


ஐயோ!என்னை நம்புங்க சார் அவன் என் சிறுவயது முதலே எனக்கு நண்பன் அதான் இப்பவும் அவன் கூட தொடர்பு வைத்திருக்கிறேன் வேறு எந்த ரகசியமும் இல்லை என்று கதறினாள்.


சரி! உன்னை நான் நம்புறேன், அவனைப்பற்றி ஏதாவது புதிதாக தெரிந்தால் எனக்கு சொல் என்று அவனது செல்போன் நம்பரை கொடுத்துவிட்டு சென்றார்.........


தப்பிச்சோம் என்று பெருமூச்சு விட்டவள்! அம்மாவின் பார்வையிலிருந்து மீள முடியாமல் சிலை போல் நின்றாள்,,,,,,,


ஏய்! "நீ அந்த அதிகாரியை ஏமாற்றலாம்" நீ ஏதாவது சந்தேகப்படும்படியாய் நடந்தால் பெத்த பொண்ணுன்னு கூட பார்க்கமாட்டேன் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்று அதட்டி கூறினாள்............


அமைதியாய் உள்ளே சென்றவள் மறுபடியும் எடுத்த பணத்தையெல்லாம் பீரோவில் வைத்துவிட்டு தொலைபேசியை எடுத்து
அவனுக்கு அழைப்பு விடுத்தாள்............


கவிதாவின் வீட்டில் ராஜலெக்ஷ்மியின் பதிலுக்காக அவள் குடும்பமே காத்திருக்க நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன் அம்மா என்றாள் ராஜலெக்ஷ்மி............
அனைவரும் என்ன என்ன என்று ஆவலும் பரபரப்புடனும் கேட்டனர்......

ம்..........எனக்காக இல்லை அண்ணிக்காக, நம் குடும்பத்திற்காக இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கிறேன் என்றாள் வெட்கம் கலந்த சிரிப்புடன்
இப்போதுதான் அனைவருக்கும் மூச்சு வந்த மாதிரி திருப்தி அடைந்தார்கள்.


ஆனால் ஒரு கண்டிஷன் என்று மறுபடியும்
குண்டைத்தூக்கிப்போட்டாள்..........என்னடி சொல்லித்தொலை என்று அம்மா கோவப்பட ஆரம்பித்தாள்,,,,,,,,,


அண்ணிக்கும் அண்ணனுக்கும் திருமணம் முடிந்த பிறகு தான் எனக்கு என்றாள்??????? உடனே பதில் சொல்லுங்கள் அண்ணி சரியா என்று கவியை கண்சிமிட்டினாள்!!!!!!!!!!!


கவிதா ராஜாவை பார்க்க; ராஜா கண்ணசைத்தான் உடனே சரி என்றாள் கவிதாவும்..........


உடனே இவர்கள் அனைவரும் கவிதாவின் சித்தப்பா வீட்டுக்கு செல்ல தயாரானார்கள்....................





தொடரும்...........

எழுதியவர் : (23-Jan-14, 11:48 am)
பார்வை : 209

மேலே