தன்னம்பிக்கை

நம்பிக்கை
வெற்றி பெற
பரிசுகளை
பெற்றிட திறமைமிக்க
உணர்வுகள்
வெகு விரைவாக
போட்டியிடுகின்றன

முயற்சியோடு
போராடும்
ஒவ்வொரு
உயிருக்கும் சாதனை
காட்சி அழிக்கும்

தோல்விகளை
கண்டு அஞ்சாத
ஒவ்வொரு மனதிற்கும்
வெற்றியின்
உருவம்
கை கொடுக்கும்

தைரியமான
நெஞ்சம்
எதையும் தாங்கும்
பாறைகளே..

தன்னம்பிக்கை
உடைய
எண்ணம் எதையும்
துழைக்கும்
ஈட்டிகளே...

எதிர்ப்புகளை
கண்டு நடுங்காத
சமநிலை
பெற்ற
நினைவுகளுக்கு
குழப்பம்
என்பது ஏது

துணிவுடன்
வாழும் உள்ளத்திற்கு
கவலை
என்பது ஏது...!

உனது
அறியாமையை
துறந்திடு
வெற்றியை நீ
என்றுமே அடைந்திடு

எழுதியவர் : லெத்தீப் (23-Jan-14, 8:51 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 140

மேலே