64 வது குடியரசு தினத்திலும்
என்னடா செய்தாய் இந்திய நாட்டுக்கு
எவ்வளவு உழைத்தாய் இந்திய நாட்டுக்கு
நாடென்ன செய்ததென்று நினைப்பது பாவமே
நீயென்ன செய்வதென்று நினைப்பது நியாயமே ....
நலிவடைந்து போனது சட்டமும் நீதியும்
வலுவடைந்து வளர்வது குற்றங்கள் மட்டுமே
நீர்பாய்ந்த இடமெல்லாம் குருதியின் ஈரமே
குடிமக்கள் மனதிலே பாதுகாப்பு பாரமே .....
என்குலத்தின் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையே
இச்சைகளின் பார்வைக்கு முடிவுதான் இல்லையே
அக்காவையும்தங்கையும்அக்கறையாய்காக்கிறான்
அடுத்தவீட்டு பெண்ணைமட்டும் இச்சைக்குகேட்கிறான் .........
குண்டூசி எடுத்தவனோ குற்றவாளி கூண்டிலே
கோடிகளாய் சுருட்டியவன் குளிரூட்டு அறையிலே
நிதிவந்து பார்த்தவுடன் நீதியோ குனியுது
சதிபளவும் செய்தவுடன் சட்டமும் உடையுது ........
நிலம்போல பிளவுபட்டு கிடக்குது நாடுதான்
எல்லைகளால் தொல்லைகளை தேடுதே மக்களே
ஒற்றுமை மறந்ததால் ஒங்குது கலவரம்
பற்றுகள் பிரிந்ததால் பலிகல்தான் தினம்தினம் .....
ஆணவமும் ஆகிரமும் ஆட்சியில் ஏறுது
பாமரனின் வாழ்க்கையை குழியிலே தள்ளுது
வாக்குகளை வாங்கிடவே வாக்குறுதி தோன்றுது
சிம்மாசனம் கண்டவுடன் சொப்பனமாய போகுது......
இந்திய பணமெல்லாம் எங்கேயோ போகுது
நம்நாட்டு பணத்திலே பலநாடு செழிக்குது
சுருட்டிசேர்த்த பணமெல்லாம் சுவிஸ் கணக்கிலே
சுபிட்சமாய் வாழுறார் அரசியல் கேடியே .......
பட்டம்பெற்றஇளைஞர்கூட்டம் பணிதேடிஅலையுது
பட்டினியில் அலைந்தேதான் தலைமுடி நரைக்குது
இந்திய தூண்கள்எல்லாம் மதுவினால் சாயுது
மலராதோ மாற்றமென்று மயங்கியே ஏங்குது ....
உழைத்துசேர்த்த காசுயெல்லாம் உருத்தெரியாமல் போகுது
ஒர்கூட்டம் உறிந்துகொண்டு ஓடோடி மறையுது
ஏழைசேர்த்த சேமிப்போ ஏளனமாய் போகுது
என்னாட்டில் இன்றவரை இதுவும்கூட தொடருது ........
எத்தனையோ ஆட்சிகளின் காலமே போனது
இருந்தபோதும் இந்தநிலை என்றுதான் மாறுது
அவலம்பல தோன்றலுக்கு ஆட்சிதான் காரணம்
அவர்திருந்த நலம்பெற்று நாடுதான் மாறுமே ......