என் மீனவன்

அக்கறையும்... இக்கரையும்...

நடுவே கடல் தாய்..

தனக்குள் பல அதிசயங்களும், ஆச்சர்யங்களும்

உள்ளடக்கியவள்....

வலிகளும் கூடத்தான்...

அவளையும் நம்பி இங்கு ஒரு கூட்டம்..

அன்றாட வாழ்க்கை பிழைப்பு...

கடல் தாயின் கருணையில்....

அவள் மடியில் வலை வீசி பிழைப்பவன்...

அவனை துன்புறுத்தும் அக்கரை மிருகங்கள்..

அவை இரண்டு கால் மிருகங்கள்...

அக்கரை அரசின் அனுமதி பெற்ற மிருகங்கள்..

அங்கு என்னவன் பேச தெரிந்தும்...

நாக்கில் ஊனமாய்...

இங்கு தட்டி கேட்க ஆட்கள் இருந்தும்...

அவர்கள் வாய்பேச்சு வீரர்களாய் மட்டுமே...

இவர்களுக்கு இது..

முதல் இரண்டு நாள் முக்கிய செய்தி...

முன்றாம் நாள் பழைய செய்தி...

இவை அனைத்து என் மனதை புண்படுத்த..

அழ தோன்றுகிறது ...

ஆண் பிள்ளை அழகூடாது என்கிறார்கள்...

என் அருமை கரு மேகமே....

எனக்காக சற்று நேரம்...

அழுதுவிட்டு போ.....

எழுதியவர் : இன்பா (6-Feb-11, 8:07 pm)
சேர்த்தது : Inbhaa..
பார்வை : 324

மேலே