அன்பு முடிச்சு
அன்பு என்னும்
பெயரில் வீசப்படும்
கயிற்றின் முடிச்சுகளில்
உணர்வுகள் இறுக்கபடுகிறது
வலி இருந்தும் விலக
மறுக்கிறது மனது
முகத்தில் விரிந்து
நிற்கும் திருப்தியில்
எந்த வார்த்தையும்
சிந்திவிடாமல் உன்னையும்
தாண்டி பயணப்படும்
எனது வாழ்க்கை
எதோ ஒரு வேளையில்
முடிச்சியை அவிழ்க்க
எத்தனிக்கும் நேரத்தை
பயன்படுத்தி போடப்படும்
புதிய முடிச்சு....