காதலென்னும் சோலையினில்45

ரஜலெக்ஷ்மி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே வீட்டிலுள்ள அனைவருக்கும் சந்தோஷம் உடனே கிளம்பி கவிதாவின் சித்தப்பா வீட்டிற்கு சென்றார்கள் அனைவரும்.........



கவிதாவின் சித்தப்பா வீடும் பெரிதாக அழகாக கட்டப்பட்டிருந்தது, அவரிடம் இந்த திருமணத்தை பற்றி ஏற்கனவே கவிதாவின் அப்பா பேசியிருக்கிறார் அவர்களுக்கு சம்மதம்; அவர்களுடைய மகனிடம் மட்டும்தான் சம்மதம் வாங்கவேண்டியதாயிருந்தது.


கவிதாவின் சித்தப்பாவுக்கும் சித்திக்கும் இவர்களுடைய குடும்பத்தைய்ம் ராஜலெக்ஷ்மியயும் ரொம்பவே பிடித்து போனது, ராஜாவின் குடும்பத்திற்கும் அவர்களை பிடித்து போக உடனே பேசி சம்மதமும் சொல்லிவிட்டார்கள் பையன் அடுத்த வெள்ளிக்கிழமை வருவான் அவனிடமும் சொல்லி ஏற்பாடுகளை செய்யலாம் என்று ஒரு முடிவுடன் இருக்கும் போது!!!!!!!


கவிதாவுக்கு மட்டும் மனதுக்கு கொஞ்சம் உறுத்தலாக இருந்தது????


என்னம்மா ஒரு மாதிரி இருக்க என்று சித்தப்பா கேட்க? இல்ல சித்தப்பா ஒரு முறை பிரசாத்திடமும் பேசிவிட்டு நாம் முடிவை உடனே எடுப்போம் என்று தனது சிந்தனையை சொன்னாள்.


கவிதா சொல்வதும் சரிதான் என்று பிரசாத்திடம் முடிவை கேட்டு விடுவோம் என்று அவனுக்கு அழைப்பைக்கொடுத்தாள் கவிதா.
மறுமுனையில் பிரசாத் எடுத்து பேசினான் நடந்த விபரங்களை அவனிடம் பேசிவிட்டு ராஜலெக்ஷ்மியின் படிப்பு அந்தஸ்து அழகை பற்றியெல்லாம் வர்ணித்தாள் கவிதா,,,,,,,,


ராஜலெக்ஷ்மி உட்பட அனைவரும் அவனின் பதிலுக்காக காத்துக்கொண்டிருந்தனர்; பிரசாத் உடனே சம்மதம் தெரிவித்தான், நான் ஊருக்கு வந்த பிறகு மேற்படி பேசலாம் என்று சொல்லிவிட்டு தன் வருங்கால மனைவி பற்றி எதுவும் கேட்காமல் இணைப்பை துண்டித்தான்...............இது அனைவருக்கும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.


அவன் ராஜலெக்ஷ்மி பற்றி எதுவும் பேசாதது ராஜெலெக்ஷ்மிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது இன்னும் 6நாட்கள் தானே அதன் பிறகு பார்க்கலாம் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.............


கவிதாவின் சித்தி ராஜலெக்ஷ்மிக்கு பூ, போட்டு வைத்து விட்டாள் மங்களகரமாக அவர்கள் விஷயங்கள் இனிதே நிறைவடைந்தது.


ராஜ குடும்பத்திற்கும் கவிதாவுக்கும் இப்பொழுது சந்தோசமாக இருந்தது ஒரு மனபாரம் குறைந்ததாக நிம்மதியடைந்தார்கள்.


இவர்கள் ஒருபுறம் சந்தோஷமாக இருக்க தாரா மறுபுறம் இவர்களுக்கு கெடுதல் செய்வதிலேயே குறியாக யோசித்துக்கொண்டிருக்கிறாள் அவளுடைய அந்த நண்பனுடன் சேர்ந்து????????????

எழுதியவர் : (27-Jan-14, 11:17 am)
பார்வை : 239

மேலே