புரியாத கணக்கு
முறையாகப் பயின்று
முதல் வகுப்பில் தேறிய
முதுகலைப் பட்டதாரி நான்.
கற்போரைக் கலங்கடிக்கும்
கணிதப் பிரிவில் .
வங்கிப் பணியில் சேர்ந்து
வாடிக்கையாளர் கணக்குகளின்
வகைகளையும் அறிந்தவன் தான் .
வரவு செலவுக் கண்க்குகளின்
விரிவான விபரங்கூட
முழுதாக அத்துபடி.
சேமிப்பு முதலீடாய்க் கொஞ்சம்
பங்குச் சந்தைப்
பரிவர்த்தனையும் உண்டு.
அடுத்தவரும் கூட சிலவேளை
ஆலோசனை கேட்பதுண்டு.
இத்தனை தெரிந்தும்
இருபது வருடங்களாய்
இன்னும் தெரியாதது
இப்போதும் ஒன்றுண்டு.
அது
.
.
.
மாதக்கடைசியில்
மனைவி கொடுக்கின்ற
வீட்டுக் கணக்கு !!
என்ன ஒரு கேவலம்
என்ற வேதனையில்
கற்றவர் கல்லாதார்
உள்ளவர் இல்லாதார்
எல்லோரையும் கேட்டுவிட்டேன்.
எங்கேயும் இந்நிலை தான் .
கற்று வந்த கணக்கில்
பிழை இல்லை
கொண்டு வந்து தருகின்ற
கணக்கில் .............?????