கட்டுடைப்பு

கட்டுடைப்பு

உச்சி மலையின்
மத்தி வெளியில்
ஒரு இளம் பட்டம் பூச்சி நடனம் ......

படமெடுக்க
பால்பிரித்த
கண்கள் நான்கு

தூரமாய்
இன்னும் ஓரமாய்
வார்த்தைகள் வகிடெடுக்கும்
முதுமைக் கவியாளனின்
முனுமுனுப்புக்கு நடுவில்.....

ஒரு கண்ணாடி உடைப்பு ...

உடைவது கண்ணாடி அல்ல
ஆயிரம் கோடி விம்பங்களின்
மரணமது
மாற்றமும் புதுமையும்
கண்ணிலும் சொல்லிலும்
வளர்ப்பவனின் மௌன வார்த்தை அது

சாலையின் இலக்கணம்
ஓரத்து மரங்கள்
பாலையின் இலக்கணம்
பச்சை வெளி

இது வார்த்தை யுத்தம்
வரம்பு மீறிய குழந்தைப்பேச்சு
ஓடையில் ஓட மறுத்த நீர்.

எழுதியவர் : Hameed (8-Feb-11, 1:00 pm)
சேர்த்தது : JAHAN POTTUVIL
பார்வை : 388

மேலே