அன்புள்ள மாப்பிளைக்கு
'என்னைத்தான் பார்க்கிறான்'
என்று எங்களை, ஏமாற்றும்
உன் கண்கள் அழகென்றால்..
வெட்கப்பட்டு சிணுங்கும்
பெண் போல, உன் கை
கொண்டு கண் மூடுவது கோடி அழகடா...
கண் பட்டு விடும் என
உனக்கு வைக்கும் கருப்பு
மைக்கே ஒரு மை வைக்க
வேண்டும், உன் அழகை
மேலும் கூட்டுவதால்....
இந்த வீட்டில், உன்னோடு சேர்ந்து
மீண்டும் பிறந்த உன் அன்னை உட்பட
அனைவரையும் ஒரு குழந்தையாக,
விளையாட்டு பொம்மையாக
மாற்றி விட்டாயடா....
தந்திரனே!!!!!!
உன் மெல்லினப் புன்னகையின் மென்மையை ரசிக்கும் ஒவ்வொரு முறையும் தோன்றுகிறது இந்த கேள்வி....
அப்படி என்னதான் தோன்றுமோ உன் நினைவுகளுக்கு மட்டும்,
இப்படி நகைக்கிராயே???
இப்படிக்கு...
மீண்டும் உன் புன்னகையில் பதில் எதிர்பார்க்கும், உன் மாமன்........