ரயில் முத்தம்

இரவு நேர ரயில் பயணங்கள்
அமைதியான சொர்க்கம்
அவள் கூட இருந்தாள் இன்னும்தான்
எதிர் எதிரே அமர்ந்து
கைவிரல்கள் கோர்த்து
எனக்கு மட்டும் கேட்கும்படி
உதடு சுழித்து
கண்கள் உருட்டி
பேசுகையில்
அருகில் இருப்பவர்கள்
காதில்லாத சிலையாகி விடுகிறார்கள்
தண்டவாளமும் சக்கரமும்
முத்தமிட்டு கொண்டே வருகின்றன
ஆனால் அவளின் ஒரு முத்தத்திற்காக
ஏங்கும் தருணம்
ரயில் மீது பொறாமை
அதிகமாகிறது
விளக்குகள் அனைத்த பின்
அவளை அனைத்து
முத்தமிட நெருங்கும்போது
ரயில் ஒலி எழுப்பி
எச்சரிக்கிறது
கேளிக்கையாய் சிரிக்கிறாள் அவள்
வெறுமையாய் சிரிக்கிறது மனது