அதோ அந்த பறவை

அதோ அங்கு
பறவை ஒன்று தவிக்கிறது...!
சிறகை அது இழக்கவில்லை
உறவை மறுக்க இயலவில்லை
அதோ அங்கு
பறவை ஒன்று தவிக்கிறது
இதோ இங்கு
கவிதை ஊமையாகுகிறது.
காதல் பறவை அது
ஜோடி உறவை
மறந்துவிட்டு ...
மனதோடு
மன்னிப்பு கேட்கிறது
பறவையே...!
ஜோடியை மறந்தது ஏனோ ?
மன ஜாடியை மூடியது ஏனோ ?
சூழ்நிலையில் உன் காதல்
முள்ளில் போர்த்திய சேலையோ?
அதோ அங்கு
பறவை ஒன்று தவிக்கிறது
இதோ எந்தன்
இதயம் உடைந்து அழுகிறது.
காதல் என்றாலே எதிர்ப்பா ?
காதலின் அர்த்தம் கதறலா?
பறவையே.........!
மனம் தளராதே........!
என்று
எப்படி நான் சொல்வேன்?
காதலுக்கு
மாற்றும் இல்லை
முடிவும் இல்லை
நான் என் செய்வேன்
என் தோழமை பறவையே..?