வானவில்லுடன் ஓர் உரையாடல்
வானவில் என்னிடம்.....
*******************************
ரசிகனே !
வான திரையில்
வண்ண நாயகன்
என்னை நீ
வர்ணனை செய்கிறாயே?
என்ன ? உனக்கு
என் மீது காதலா ?
நான் :
******
---வா வானவில்லே !
---உன் மீது காதலா ?
---இல்லாமலா இருக்கும்
---வண்ண கூட்டணியில் என்
---எண்ணத்தை அபகரித்துவிட்டு
---என்ன இப்படியொரு கேள்வி ?
---உனது அழகே
---பலவண்ண தொகுப்பு
---வெறுப்பா உனக்கு கருப்பு ?
---ஏன் இந்த புறக்கணிப்பு ?
வானவில் (கோபத்துடன்) :
**************************
நிறம் பிரித்து
தரம் பார்க்கும்
புத்தி படைத்த
கூறுகெட்ட மானிடனே ?
கருப்பு என்று ஒதுக்கி
வெறுப்பு நிறமாக்கி
பிழைப்பு நடத்தும்
மானிட பிறவி நீயா
கேட்கிறாய் கேள்வி ?
பகலவனை மணந்து
ஒளி சிதறலாய்
என்னை பெற்றவள் என்
அன்னை கருமேகம்.
நானா வெறுப்பேன் கருப்பை ?
கருநீலத்தில் கருமை
என்னிடம் உண்டு
கருவிழியின் வென்மையும்
என்னிடம் உண்டு.
இவ்விரண்டும் எனை
இயக்கும் இதயம்.
நானா வெறுப்பேன் கருப்பை?
இன்னும்
புரியவில்லையா ?
தெளிவாக சொல்கிறேன் கேள்
கருப்பின் தொகுப்புதான்
பல வண்ணம்.! -என்
ஏழு வண்ணங்களையும்
சேர்மானங்களாய்
சேர்த்து சோதித்துப்பார்..!
கருப்பு தெரிகிறதா ? என்
வெறுப்பு தெரிகிறதா ?
இன்னும் புரியவில்லையா?
ஆறாம் அறிவை
உபயோகப்படுத்து ..!
கருப்பு புரியும் -நிற
வெறுப்பு அணையும் -
உலக பந்தில்
புன்சிரிப்பு பூக்கும்.
நீ விடை பெறு..!
நான் விடைப்பெறுகிறேன் !
~~~~~~~~~~~~~~~இரா.சந்தோஷ் குமார்