ஆறுயிர் நண்பா
கருவறைக்குள் அவளுயிரை
எனதாக்கித் தந்திட்டார்
எனதுருவின் காரணமே
கணமெல்லாம் கைக்கொண்டார்
அறிவுதனில் நல்மறையை
நெஞ்சோடு புகுத்திட்டார்
நல்வாழ்வு உம்மருளால்
என்றோடும் என்னுடையார்
இந்நால்வரோடு ஐந்தானார்
என்னுடனே இறுதிவரை
எனதுயிரில் ஐக்கியமாய்
என்னுலகில் ஆருயிர்நண்பா
-இப்படிக்கு முதல்பக்கம்