இது காதல் உலகம் - சி எம் ஜேசு

காதலாகி கனிந்த உலகில்
சாதலாகி சாதித்தவர்கள் கோடி

பேதையாகி பிழையாகி போனவர்க் கோடி
போதையாகி பொருள் இழந்து வாடினோர் கோடி

வதைபட்டு உதைபட்டு மிதிபட்டு
கதைபட்டு மீண்டவர்க் கோடி

மெல்லிய தென்றலாய் வந்து
வல்லிய புயலாய் தாக்கி - தன்
எல்லையை விஸ்தரித்த காதல்

பிறக்கும் குழந்தைகள் முதல்
இறக்கும் முதியார்வரை இணைபிரியா காதல்

ஏழைகள் என்றில்லாமல் பணக்காரர்கள்
என்றில்லாமல் ஏற்பவர் நெஞ்சினில்
மட்டுமே எரியும் காதல்

விலை பேச முடியாக் காதல் - இது
நுணுக்கமான இணக்கமான நீண்டு

மாண்டு போகாமல் வாழும் உலகக் காதல்
என்பதால் இது காதல் உலகம்

எழுதியவர் : சி.எம். ஜேசு (14-Feb-14, 11:33 am)
Tanglish : ithu kaadhal ulakam
பார்வை : 92

மேலே