சந்திப்பின் முன்னும் பின்னும்
உணவருந்திக் கொண்டிருந்த நேரத்தில்
உன் பின்னால்
‘சொல்லாதே’யென
சைகை செய்தபடி
உன் கண்ணைப் பொத்திய
உன் உடன்பிறவா சகோதரியையும்
உன் சகோதரனையும்
முதன் முதலில் சந்தித்த
மகிழ்ச்சியையையும்
ஆச்சரியத்தையும்
தேக்கி வைத்திருக்கிறேன்..
உனது நெருக்கத்தினூடே..