நரம்பில்லா நாக்கே

வளைந்து நெளிந்து நீ
தடையேதுமில்லா வாய்
உமிழ்நீர் தடாகத்தில்
நீந்தி திரிகிறாய்
இதை நீ அடக்கிக்கொள்
இல்லையேல் உன்னையிது
கொன்று அடக்கிவிடும்
சொல்லொன்று வெல்லும்
சொல்லொன்று கொல்லும்
வாழ்வும் வீழ்வும் உன்னாலே
சுவையுணரும் நாக்கே
சுவைபடவே என்றும் பேசு

எதற்கும்கிடையா உன்னதம்
உனக்கே கிடைத்திட்ட
அரியதொரு நல் வாய்ப்பு
உடலுக்கு உள்ளும் புறமும்
வியாபிக்கும் ஒரே உறுப்பு

அதற்க்கான தத்துவம் இதுவோ
நல்லவைகள் பேசிடவே
நளினமாய் வெளியே வா
கெட்டவை பேசாதிருக்கவே
பற்களுக்கிடையில் நீ
பத்திரமாய் பதுங்கிக்கொள்

யாவருக்கும் பயமே
படமெடுக்கும் பாம்பும்
பாதை மாறும் நாக்கும்
என்றும் ஏவருக்கும்
கொடிய விசமே தரும்

நாவை காத்துக்கொள்
நாசங்கள் விளைக்கும் முன்
வள்ளுவன் சொல்போல
தீயின் வடு மாறினாலும் உன்
நோவின் வடு மாய்வதில்லை

நாகாக்கும் நண்பர்களோடு நானும்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (26-Feb-14, 2:44 pm)
பார்வை : 468

மேலே