ஏன் - ஏன் - ஏன்- சொல்வீரோ - குமரிபையன்
சுதந்திரம் கேட்டு சூறாவளியாய் எழுந்தீரே
சுற்றும் உலகில் சுதந்திர சுவாசம் பெற்றீரோ.?
சுடுகிற அடுப்பின் துணையாய் வீட்டில் நின்றீரே
சுத்த கல்வி சுடராய் பெற்றும் தெளிந்தீரோ.?
சுற்றிய கொடுமை முற்றும் களைந்து வந்தீரோ.?
நீங்கள் சுதந்திரம் கேட்டு சூறாவளியாய் எழுந்தீரே..!
பணிக்கு சென்றால் பிணிகள் தீரும் என்றீரே
பலபணிக்கு சென்று பணமும் நிறைய சேர்த்தீரே..!
இனிதாய் இல்லறம் என்றும் வாழ துடித்தீரே
இரு கைகளில் வாழ்வை இறுகபிடித்து நடந்தீரே..!
இருந்தும் உங்கள் கொடுமை துறந்து சிரித்தீரோ..?
நீங்கள் சுதந்திரம் கேட்டு சூறாவளியாய் எழுந்தீரே..!
மனதில்உறுதி உதிக்க வேண்டும் கொதித்தீரே
மங்கைவீரம் விண்ணை தொட்டு சொன்னீரே..!
மகளிர் காவல் ராணுவம் எல்லாம் நிறைத்தீரே
மண்ணில் வாகனம் மடியில்லாமல் பிடித்தீரே..!
பயணம் தனிமை அச்சம் விட்டு சென்றீரோ..?
நீங்கள் சுதந்திரம் கேட்டு சூறாவளியாய் எழுந்தீரே..!
வாழ்க்கை துணையை தேர்வு செய்வேன் என்றீரே
வாழ்த்து சொன்ன வாய்கள் போற்ற வாழ்ந்தீரோ..?
பிடித்தவனோடு தனி குடித்தனமாய் வசித்தீரே
பிடித்தவன் மடுத்து மடியில் கனமாய் அழுதீரே..!
பின் உயிரை மாய்க்க எமனைதேடி அலைந்தீரோ..?
நீங்கள் சுதந்திரம் கேட்டு சூறாவளியாய் எழுந்தீரே..!
ஆடை குறைத்து அழகை கூட்டி ரசித்தீரே
ஆண்களை சட்ட கட்டம் கட்டி போட்டீரே..!
ஆட்சி கட்சி இரண்டும் சுவட்டில் பெற்றீரே
அரிய திட்டம் சாதனை எதுவும் வகுத்தீரோ..?.
அற்புதம் செய்து மக்கள் நினைக்க செய்தீரோ..?.
நீங்கள் சுதந்திரம் கேட்டு சூறாவளியாய் எழுந்தீரே..!
பெண்ணும் பெண்ணும் இணைந்து வாழ கேட்டீரே
கண்ணில் கவலை துறந்து வாழ்வில் இணைந்தீரே..!
கரைகள் கடந்து காதல் சுகத்தை கண்டீரே... பின்
கறைகள் புரண்டு கடை வீதியிலே நடந்தீரே..!.
புதுமைபெண்ணே கொடுமை தொடருது கண்டாயா
கொடுமை தொடரும் குற்றம் ஏனோ சொல்வாயா..?
=========================================
அன்றைய காலத்தில் இருந்தே பெண்கள் அடிமைகளாகவும், போக பொருளாகவும், கொடுமைகளுக்கு ஆளாகியும் வாழ்ந்து வருகிறார்கள்..!
இன்று ஒப்பிடும்போது அனைத்து துறைகளிலும் கால்வைத்து எவ்வளவோ முன்னேறிவிட்டார்கள். ஆனால் அவர்கள் மீது திணிக்கும் கொடுமை மட்டும் அதிகரித்ததே தவிர குறையவில்லை. அது ஏன் என்றுதான் கேட்கிறேன்.! இது மட்டுமே கரு..!
--நட்புடன் குமரி