பெண்ணே பெண்ணே
சுதந்திரம் வாங்கி சுமாராய்
60 வருடங்கள் தாண்டிவிட்டோம்
நாட்டின் வளர்ச்சி அசுரத்தனமாய்
வளர்ந்து வல்லரசாய் நிற்கிறது.
ஒவ்வொரு துறையிலும் மைல் கல்லாய்
இல்லை இல்லை வைர கல்லாய்
மின்னிக்கொண்டு இருக்கிறார்கள்
இன்னும் எத்தனை பெண்கள்
சமையலறை தாண்டாத
நள மகாராணிகளாய்
அடுப்படி சொர்க்கத்துக்குள் அடைபட்டு கிடக்கின்றனர்
அவர்களின் எல்லை இல்லாத சுதந்திரத்தை
மூன்று முடிச்சுக்குள் முடிந்து வைத்த
மந்திரகாரர்கள் கணவன்கள்.
உள்ளத்து கருத்து முதல்
உடுக்கும் உடை வரை
எல்லாமே அடுத்தவர்களின்
விருப்பத்திற்காக வாழும் பெண்கள்
எத்தனை பேர்.
தன் மனதின் விருப்பத்தை யாருக்காகவும்
விட்டு கொடுக்காமல் தனது எண்ணத்தில்
வலிமையாக நின்று சாதித்து பெண்கள்
வாழும் காலம் என்று வரும்
அன்றே சுதந்திரமான மகளிர் தினம்