உலகத்தில் உறவுகள்
வெட்டியக் கரும்பானேன் நான்
உறவுகள் கடிக்க இனிமையாய்
குப்பையானாலும் காகிதமாய்
இதயத்தில் புதைத்தால் வளமாவேன்...!
*****************************
வெற்றிக்காக ஓடும் வாழ்கையில் நான்
தோல்வி வந்து மூச்சிரைக்க
தளர்ந்து பின் எழுந்து
மரணம் தொடும் முன் எல்லையை
தீர்க்கமாய் தீர்மானிக்க எல்லாம் இழந்து ...!
#################
கடல் அலைபோல் நான்
எத்தனை துடிப்புடன் எழுந்தாலும்
முட்டுகட்டையாய் உறவுகள்
விழுந்து எழுந்து கரையை கடக்க முடியாமல் ...!
*******************************
முருங்கையாய் நான்
உறவுக்கெல்லாம் உடலுழைப்பை தந்து
எனக்கென கரிசனம் காட்டிட நாதியின்றி
புதுஉயிர் தந்து மடிகின்றேன் ...!
*******************************