லேட்டரல் திங்கிங்
எவரோ போட்டுத்தந்த
பாதையில் போகாமல்
மாற்றி யோசிப்பது ;
கேள்விகளாக கேட்டு
கேட்டு விடையை
வரவழைப்பது;
பயன்படாத எதையும்
தூக்கி
குப்பையில் போடுவது;
அறிவை மட்டுமே
ஆயுதமாகப் பயன்படுத்துவது
இவைதான்
லேட்டரல்
திங்கிங் என்றான் நண்பன்
புரியவில்லை என்றான்
இன்னொருவன்
பெரியார் வாழக்கை
வரலாற்றைப் படி
புரியும் என்றேன் நான்!