நிரப்பமாய் நீயே நிறைந்திருப்பாய்
கண்ணே எனை நீ
காண நினைத்திடின்
கணிப்பொறி திறந்து
கணக்கினை துவக்கி
கடவுச்சொல்லிட்டு பின்
என் தகவலை திறந்தோ
கைப்பேசியை செயல்படுத்தி
தொடுத்திரையை தேய்த்து தேய்த்தோ
கடும் முயற்சியின் பின்னே காணவேண்டும்
நானோ,
என் புறக்கண் மூடி
அகக்கண் திறந்திடின்
தோன்றிடும் ஒவ்வொரு நகக்கண்ணிலும்
நிரப்பமாய் நீயே நிறைந்திருப்பாய் .....