காதல்

இரு கரம்கூட கோர்க்காமல்
வழிகள் மட்டும் கோர்த்து
மடந்தை அவளுடன் - சில
அடிதூரம் நடந்தேன்

வாய் திறந்து பேசவில்லை
வழிகள் மட்டும் பேசியது

பாதாள சாக்கடைக்கு தோண்டிய
கரடுமுரடான பாதைகூட
புல்வெளியாய் தெரிந்தது - என்னக்கு

பலர் எங்களை தாண்டிசென்றும்
பேசிசென்றும் - என்னால்
நிசப்தத்தையே உணரமுடிந்தது

இருவரும் நானம்கலந்த
புன்னகை புரிந்தது...
வார்த்தை சொல்லவந்து
தடுமாறியது...

புரியாத புதிய அனுபவம் |;

இந்த நிலைக்கு பெயர்தான்
காதலா ?

காலம்கடந்த இந்த நிகழ்வு
விந்தையாக இருந்தது - என்னக்கு
இருந்தாலும் பரவில்லை
காதலிக்க ஆரம்பித்துவிட்டேன் -
நானும்

பார்த்ததும் கட்டிக்கொள்ள அவளென்ன -
அடையா ?
பார்த்த முதல் மாத்திரையிலேயே - காதல்

பலரை ஏளனம் செய்த -நான்
இன்று என்னை பார்த்து சிரிக்கிறேன்
காரணம் - காதல்
அவள் நிரம்கூட - ஏன்
முகம்கூட சரியாக தெரியவில்லை

அதற்குள் திடீரென சலசலப்பு
விழித்துக்கொண்டேன் -
பால்கரனுக்கு கூட - பொறுக்கவில்லை
நான் கணவில் காதலித்து.

எழுதியவர் : R.Lakshmikumar (17-Mar-14, 9:26 pm)
Tanglish : kaadhal
பார்வை : 79

மேலே