+வாழத்தான் நினைக்கிறேன்+

வாழத்தான் நினைக்கிறேன்
இருக்கும் கஷ்டங்களை
இயல்பாக காணப்பழகி
இல்லாத செல்வமெல்லாம்
இருப்பதாக எண்ணிக்கொண்டு
வாழத்தான் நினைக்கிறேன்
முடியவில்லை
நிகழும் கொடுமைகளால்
நித்தம்நித்தம் மனம்நொந்து
நிஜமும் ஒருநாளில்
நிச்சயமாய் வெல்லுமென்றெண்ணி
வாழத்தான் நினைக்கிறேன்
முடியவில்லை
அன்பில்லாத மனிதம்கண்டு
அனுதினமும் கண்ணீர்சிந்தி
ஆசைகொண்ட மனிதவாழ்க்கை
ஆணவத்தில் புதைந்திடுமோ பிழைத்திடுமோ என்ற சிந்தனையில்
வாழத்தான் நினைக்கிறேன்
முடியவில்லை
தப்புக்கள் செய்துசெய்து
தளிர்க்கின்ற சமூகம்கண்டு
தப்பிப்பிழைத்த நீதிநேர்மை
தத்தளிக்கும் நிலை கண்டு நெஞ்சத்தை கல்லாக்கி
வாழத்தான் நினைக்கிறேன்
முடியவில்லை
பெண்கொடுமை வன்கொடுமை
புதுப்புதிதாய் தினம்நடந்து
பொன்னான பூமியெங்கோ
போகும் அவல காட்சி மறையுமென்றெண்ணி
வாழத்தான் நினைக்கிறேன்
முடியவில்லை