நண்பனும் எதிரியும்

முன்னே உதைத்தான் எதிரி
பின்னே உதைத்தான் நண்பன்

பணம் மேல் நாட்டம் கொண்டான்
ஆதலால் என் மீது நட்ப்பு கொண்டான்

பணத்திற்காக பழகியவனிடம்
நட்ப்பை எதிர்பார்க்கலாமோ ?

துயரங்களை துடைப்பதுபோல்
அத்துயரங்களை அவனே செய்தான்

நம்பினேன் நண்பன் அவனை
அந்த நம்பிக்கை கொன்று விட்டான்

நானும் இதற்க்கு காரணமாய்
இருந்தேன் என்பது தான் வேதனையே
என்னால் அவனும் மாறிப் போனான்
என்பதை எண்ணி அழுகின்றேன்
சிரிக்கும் போது மட்டும் உடன் இருந்தான்
அழும் போதோ அவன் காணவில்லை

கற்றேன் வாழ்க்கை பாடம்
கயவர்களின் நட்ப்பினாலே.

எழுதியவர் : விவேகானந்தன் (19-Mar-14, 11:04 am)
சேர்த்தது : vivek.mac
Tanglish : nanbanum ethirium
பார்வை : 246

மேலே