♥ஒரு குழதையின் கண்ணீர் கவிதை♥
![](https://eluthu.com/images/loading.gif)
அன்னை கற்பத்தில்
வாழ்ந்தேன் அன்று!!!
அன்னை காப்பகத்தில்
வாழ்கிறேன் இன்று!!!
கருவறைக்கும் இரக்கமில்லாமல்
போனது அன்று!!!
கருணை இல்லமே இரக்கமாய்
ஆனது இன்று!!!
ஒரு சொந்தங்கள் கூட
வந்ததுதில்லை அன்று!!!
பல பந்தங்கள் கூட
வாழ்கிறேன் இன்று!!!
அம்மா என்ற வார்த்தை
வேதமானது அன்று!!!
அம்மா என்ற வார்த்தை
துரோகமானது இன்று!!!
அன்னை மடியே சொர்க்கம்
என்று நினைத்தேன் அன்று!!!
அன்னை இல்லமே சொர்க்கம்
என்று நனைத்தேன் இன்று!!!