கலாபக் காதலி
விஞ்சு தமிழ்
கெஞ்சுமவள்
கொஞ்சு மொழி
இரவல் வேண்டி ...
வஞ்சியவள்
இஞ்சி இடைத் தேன் பருகி
துஞ்சும் மயக்கத்தில் ...
வண்டினங்கள்
மித மிஞ்சுமவள்
மென் பஞ்சு இளமை காண்
அஞ்சி அஞ்சி
அருகே வரும்
கூடுகட்ட .....
தூக்கணாங் குருவிகள் ......
எஞ்சிக் கசிந்தொழுகும்
அவள் இதழ்க் கஞ்சிப் பருகிட
குருவிக் குஞ்சினங்கள்
கெஞ்சி நிற்க்கும்
வரிசையாய் ....
பிஞ்சு அவள்
ஈரஞ்சு விரலிடுக்கில்
கொஞ்சம்
கிடைத்தால் இடம்
கொடிய நஞ்சுமது ....
அமிர்தம் ....
உயிர் உறிஞ்சுமவள்
தாளமிடும்
அன்ன நடை காண
நஞ்சை புஞ்சை வாழ்
குனிந்த ......
குறிஞ்சி மலர்கள்
நிமிர்ந்துப் பார்க்கும்
லஜ்ஜை விட்டு .....
அவள்
தரக் கஞ்சப்படும்
மடி மஞ்சமதில்
கிடைக்குமாயின் தஞ்சம்
தந்திடுவேன்
லஞ்சமென
என் உயிரையே
நானும் .....
அவளை
செஞ்ச பிரம்மனவன்
விஞ்ஞானி அவன் ....
ஞாலம் காணா ஞானி .....
விஞ்ஞான மெய்ஞானக் கலவையாய்
படைத்துவிட்டான்
அவளை .....