ஜெய் ஜெய் ஹனுமான்

வால் முளைத்த பட்டம்
வானில் பறந்த படி இருந்தது.....!

பக்தி என்ற நூல் கட்டி அதனை
பரவசத்தோடு பார்த்தேன்.....

அட என்ன அதிசயம்......?!

ஜெய் ஹனுமான்......!!

பறந்து வந்த ஹனுமனே
சஞ்சீவி மலையை எங்கே என்றேன்....?

நானும் அதைத் தேடித்தான் போனேன் ஹரி....
நாலா புறமும் கட்டிடம்தான் இருந்தது....

விசாரித்துப் பார்த்ததில்....
சஞ்சீவி மலையை விற்ற பணம்
சுவிஸ் வங்கியில் பத்திரமாக இருப்பதாக தகவல்

இப்போது அந்த இடம் யாரோ ஒரு பினாமி பெயரில்
என்றார் ஹனுமான்......

சரி விடு ஹனுமான்
உன் தரிசனம் எனது பெரும் பாக்கியம் என்றேன்

ஆம்....

காணும் பொருட்களில் எல்லாம் - கண்கள்
கடவுளைக் கண்டு கொண்டால் - இனி உலகில்
காட்சிகள் யாவுமே
கடவுள் தந்த வரம் அன்றோ ?

ஸ்ரீ ராம ஜெயம்

அனைவருக்கும் இனிய சனிக்கிழமை வாழ்த்துக்கள்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (22-Mar-14, 8:04 am)
பார்வை : 137

மேலே