அன்பிற்கினிய அகனார்க்கு இனிய வாழ்த்துக்கள்

அன்பிற்கினிய அகனார்க்கு இனிய வாழ்த்துக்கள்!!!!!

தமிழ் தொண்டாற்றினர் பலரென்றே
நான் நூலில் படித்தறிந்ததுண்டு
நேர் நின்றறியேன் நானறிந்ததெல்லாம்
செவியது விழிவழி செய்தியெனவே!! !!!

கண்டும் கேட்டது மாகியொருவர்
தமிழ்த் தொண்டினை என்சொல்வேன்
எழுத்தினில் கண்டதுதானவரும்
அமிர்த கணேசரென்னும் பெருந்தகையே!!!!!

கவிக் கூட்டதிற்கே நிற்பாலமென
இணைத்து வைத்த தோடன்றி
தமிழூக்கம் அவரவர்க்கும் தந்துமே
தன்னலமின்றி வாழ் பிறவியெனவே!!!!!

தமிழ் நடைபயில வந்தோர்க்கெல்லாம்
அழகு நடைபோட அறிவுரை கம்பளங்கள்
விரித்ததனால் விரிந்ததுவோ "எழுத்தில்" தமிழ்
கவிஞர்களும் நடக்கின்றார் வீரநடையதுவே!!!!!

வீரநடை காரணியாம் அகனாரை
போற்றிப் பாடிடத்தான் வாழ்த்தினிலே
தமிழில் ஆராய்ந்து தேடுகின்றேன்
எவரின்றும் வாழ்த்திடா வார்த்தைகளே!!!!!

அமுதத் தமிழினிலே தோரணங்கள்
ஆயிரந்தான் "எழுத்தினிலே" அலங்கரிக்க
அழகுத் தோரணங்களை அடையாளம்
காட்டி நின்றீர் விருதும் விழாவுமானதுவே!!!!!!

அகங்குளிர அகனாரை வாழ்த்துதற்கு
அகவையில்லை யாயினும் ஆண்டவனை
வேண்டிநின்றேன் அவராயுள் கூடுதலில்
தமிழாயுள் மேலுந்தானின்னும் கூடிடவே!!!!

நீள்நெடிதாயுளுடன் அன்புடைய அகனாரும்
ஆரோக்கிய அணைப்பினிலே வாழுதற்கு
இறைவனிடம் வேண்டுதல்.. வேண்டுதலொடு
என்னுள்ளுறை இறைவனவன் வாழ்த்துக்களே!!!!!

அன்புடன்,
சொ. சாந்தி, சென்னை--21

எழுதியவர் : சொ. சாந்தி (24-Mar-14, 3:41 pm)
பார்வை : 141

மேலே