மூன்றெழுத்து கவிதை
அம்மா என்ற சொல்லுக்காக
பத்தியம் இருந்து
பெத்து எடுப்பவள்!
தனக்கென எதுவும் இல்லாமல்
தன் பிள்ளைக்காகவே வாழ்பவள்!
எந்தக் குழந்தையையும்
தன் குழந்தையாக
எடுத்து கொஞ்சுபவள்!
தலைகுனிந்து செல்லாதே!
தலை நிமிர்ந்து செல்
என்று எடுத்து சொல்பவள்!
முகம் பார்த்தே
தவறை கண்டுபிடிப்பவள்!
தவறே செய்தாலும்
மன்னித்து ஏற்றுக்கொள்பவள்!
அம்மா
அழகான
மூன்றெழுத்து கவிதை!