என் அன்னை

உதிக்கும் உயிர்கள் அனைத்தும் முதலில்
உதிர்க்கும் வார்த்தை.....
அசையும் உயிர்கள் எல்லாம்
இசைக்கும் வார்த்தை....
உள்ளம் துவளும் போது உறுதுணையாய்
உடன்வரும் வார்த்தை...
மழலை முதல் மன்னன் வரை மனசுமையை
விரட்டும் மந்திர வார்த்தை....
ஆலயம் பல கண்டாலும் அம்சங்கள் அனைத்தும்
அடங்கிய அர்ச்சனைக்கு உகந்த வார்த்தை...
அறிஞர்கள் பலர் இருந்தும் எழுத மறந்த
இன்னொரு வேதம் இந்த வார்த்தை...
அன்பின் வழி ஆயிரமென்றாலும் என்றும்
அதன் தலைமை அரியணையை அலங்கரிக்கும்..
தலைச்சிறந்த வார்த்தை """""அம்மா"""""""

எழுதியவர் : கவிஞர். நா.பிரகாஷ் (29-Mar-14, 8:45 pm)
சேர்த்தது : prakashna
Tanglish : en annai
பார்வை : 288

மேலே