என் தெய்வம்

மழழை
மனம் கொண்டவள்அம்
மழழையின் மகன்நான்...

பிள்ளை
குணம் கொண்டவள்அப்
பேதையின் பிள்ளைநான்...

மண்ணில்
நான் பிறக்க
மறுபிறவி எடுத்தவள்நீ...!

கண்ணில்விழுந்த்தூசியை
கண்ணீர் கொண்டு
கழுவி யெடுத்தவள்நீ...!

அன்பு
செய்வதில்மட்டுமல்ல அறுசுவை
அமுதுபடைப்பதிலும் உனைமிஞ்ச ஒருத்தியில்லை...!

நம்பிக்கையில்லை
தெய்வங்கள்மீது நானொரு
நாத்திக னெனறேன்...

திட்டிக்கொண்டே
என்நெற்றியில் திலகமிட்டாய்
திருநீரு பூசிவிட்டாய்...

தெரியுமாஉனக்கு
நான்தினமும் தொழும்
தெய்வம் நீதானென்று...!

தேவையில்லைமற்ற
தெய்வங்கள் நான்தேடிவந்த
தெய்வம் நீயிருக்க...

நீகூப்பிட்டகுரலுக்கு
ஓடிவருவேனொரு நாயாக...
எப்பிறவியிலும் நீயேவேண்டும்
என் தாயாக...

அன்னையே
உன்னையே வணங்குவேன்
உனையன்றியாரை வணங்குவேன்
காத்தருள்வாய் கடைசிவரை...!
-இரா.வீரா

எழுதியவர் : இரா.வீரா (30-Mar-14, 8:45 pm)
பார்வை : 404

மேலே