பொய்எனன்றே கொண்டனையோ எமைநீயே

பொய்எனன்றே கொண்டனையோ நின்புகழ் பாடமுனைவோனை
தாய்முகமிதன்றே கொண்டாடுவோனை மெய்பொருளே நீ பிரேமிக வரதா
பொய்காட்சியென்றே விரிவுறும் பிரபஞ்சபொருளே
பொய்யன்றோ
மெயகாட்சிஎன்றே நம்பதரும் சந்திரசூரியரும்
பொய்யன்றோ
****************************************************************************
தோன்றிமறை நல்லிப்புவனமும் காட்சியான பொய்யன்றோ
தோன்றிடுதே நல்லிப்புவனம்வாழ் உயிர்களே
பொய்யன்றோ
தோன்றியே பொய்யென்றே நீர்ணியிப்பதும்
பொய்யன்றோ
பொய்எனன்றே கொண்டனையோ மெய்பொருளே நீ பிரேமிக வரதா
**************************************************************************
கனவுநனவு விழிப்பிருப்பும் தாங்குமுடல் பொய்யன்றோ
மனம்தன் விழிவழிகாணும் காலகோட்பாடே
பொய்யன்றோ
வனம்தனம் வானகடலுமென இருக்குமனைத்தும்
பொய்யன்றோ
மனம்மேவும் கோவிந்தா கிருஷ்ணா பிரேமிக வரதா
**************************************************************************
இருப்பதாய் எண்ணபுகுத்தும் நானுணர்வே பொய்யன்றோ
குருரூபனே நானென்ற தன்னுணர்வே
பொய்யன்றோ
அருமழகனே கேள்விக்கு பதிலென்றெ இதுவானதே
பொய்எனன்றே கொண்டனையோ பிரேமிக வரதா
எமைநீயே
பொய்எனன்றே கொண்டனையோ பிரேமிக வரதா
எமைநீயே
எமைநீயே
பொய்எனன்றே கொண்டனையோ
***************************************************************************

எழுதியவர் : குருவருள்கவி (1-Apr-14, 12:10 pm)
பார்வை : 85

மேலே