வரைந்திட்ட சித்திரமே வருத்தமும் ஏனோ

​மங்கிய ஒளியிலும் மிளிர்ந்திடும் மங்கையே
ஏங்கிடும் பார்வைதான் ஏனோ பாவையே !
​பொன்னிற ஆடைகொண்ட பொன்மணியே !
வெண்புறாக்கள் அருகில் உள்ள பெண்புறாவே !

தொடுத்திடும் மல்லிகை படுத்தியது என்ன
சிதறிய பூக்களால் சிந்தனை சிதறியதேன் !
வரைந்திட்ட சித்திரமே வருத்தமும் ஏனோ
வளர்ந்திட்ட மலர்க்கொடி நீ வாடுவதேனோ !

விழிகளில் வழியுது விண்ணளவு சோகங்கள்
இருப்பும் கொள்ளாமல் இமைகளும் தவிக்கிறது !
வற்றிய கேணியாய் வதந்கிட்டதே உன் முகம்
பற்றிய நோய்என்ன பழுதானதே உன் உள்ளம் !

படர்ந்திட்ட முல்லையே தொடர்ந்திடு வாழ்வை
கவலையை சேர்த்திடாதே கன்னிநீ சோர்ந்திடாதே
கனவுகள் மெய்யாகும் கானல்நீரும் பொய்யாகும்
​விருப்பங்கள் நிறைவேறும் விரைவாக நடந்தேறும் !

​ பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (1-Apr-14, 1:23 pm)
பார்வை : 146

மேலே