அம்மாவின் அன்பு

உலகைக் குறை சொல்ல
ஓராயிரம் சொற்கள் ஓடி வந்தன -ஆனால்
உன்னைக் குறை சொல்ல
ஒரு சொல்லும் கிடைக்காமல்
ஓடி ஒளிந்து கொண்டன
ஓடி விட்ட சொற்களை
ஓடிச் சென்று
ஒரு சொல்லையாவது
இழுத்துப் பார்த்தேன் -ஆனால்
அது சொன்ன பதிலும் போவென்றுதான்
ஏனென்று நினைத்தால்
சொற்களும்கூட- உம்
அன்பிற்கு பகையாக விரும்பவில்லை
என்பதை அறிந்தேன் -அதுதான்
அம்மாவின் அன்பு என்பதை உணர்ந்தேன்.

எழுதியவர் : பெ. ஜான்சி ராணி (2-Apr-14, 10:00 am)
Tanglish : ammaavin anbu
பார்வை : 293

மேலே