என்னினிய புதல்வன்
என்னினிய தவபுதல்வன்
எனக்கு வழியாய் அமைவானே!
வந்தூர் சென்றான் என் புதல்வன்
வாழ்க்கை தெரிந்து வாழ்கின்றான்
பாடம் படிக்கும் என் புதல்வன்
பாட்டும் படிப்பான் அவன் தானே
பட்டம் பெற்று வருவானே!
பாதைகள் பலவும் கற்ப்பானே!
படிப்பில் கவனம் வைப்பானே!
பயணம் செய்து வருவானே!
அவன் வரும் நாளை எதிர்ப்பார்த்தே
ஆவலும் தான் எழுகிறதே!