நடுநிசிக் கிறுக்கல்கள் - மணியன்

இரவுப் பாடகனாய்
சில் வண்டுகளின்
சிலீர் சப்தங்கள். . . . .

வீட்டுக் கொல்லையில்
நட்டு வைத்த மரங்களில்
மொட்டு விரித்த
படுக்கையின் மேல்
பட்சிகளின் மெல்லிய குறட்டை ஒலி (?!) . . .

மழைக்காலத் தவளையொன்று
மந்திரம் சொன்னது .
மங்கிய நிலவொளியில் . . . . .

நடந்த சுவடுகள்
பதிந்த பதிவுகள்
தொடர்ந்த கவலைகள்
அடர்ந்த கனவுகளில்
பறந்து வரும் நேரம் . . . . . .

இன்றைய பொழுதுகளில்
வென்றது வியர்வை மட்டும்.
தின்றது தமிழை மட்டும் . . . . .

தேங்கி நிற்கும் குப்பைகளில்
ஏங்கி நிற்கும்
மனதை மட்டும்
திடப் படுத்தி
தேடல்களில் சுகங்களை
தேடுகிறேன் கனவுகளின் அணிவகுப்பில் . . .

காசு வேண்டுமா
காமம் வேண்டுமா
காதல் வேண்டுமா
கவிதை வேண்டுமா
கழனி வேண்டுமா
புலமை வேண்டுமா
கேட்கின்றான் கனவரசன் . . . .

இனி உறக்கம் ஏது
கனவு ஏது
காசு காமம்
காதல் கழனி
கண்டவரை உண்டாயிற்று. . .
கற்பனையில் திளைத்தாயிற்று. . . .

படைதிரண்டு வந்தனர்
பட்டிமன்றப் பெருந்தகைகள். . .
விரைந்து வந்தனர்
வழக்காடும் வல்லமையினர். . . .

இவர்களிடம் சிக்காமல்
இதோ இருக்கிறேன் என்று
இளித்தபடி என் பக்கம் வந்தனர். . .
இன்று வரை என்னோடு
மூவுயிரும் ஓருடலாய்
முதுமை வரைத்
துணைக்கு வரும்.
கவிதையும் புலமையும். . . . .

பட்டி மனறம் படபடக்கட்டும்
வழக்காடுமன்றம் வாய்தா கேட்கட்டும்
வாருங்கள் கவிதையும் புலமையும்
விரைந்து என் போர்வைக்குள். . .

வரும் வியர்வை
தரும் புது விடியல். .
புது உதயம் காணும் வரை
இமயம் வரைப் போய் வரலாம் . . . . . .



*-*-*-*-*-* *-*-*-*-*-* *-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (3-Apr-14, 12:27 am)
பார்வை : 201

மேலே