என் விடியும் காலம் எப்போது
வயசுக்கு வந்து பல வருஷம்
தாவணியும் நான் போட்டாச்சி
ஏழையின் வயிற்றில் பிறந்ததால
ஏழு ஜென்மம் கடந்தாச்சி ....
நான் வளர்த்த ஆடு
குட்டி ஒன்று ஈன்றாச்சி
நான் நட்ட தென்னங் கன்றோ
பாளையும் போட்டாச்சி
பட்டி தொட்டி எங்கும்
பல வருடம் கேட்டாச்சி
பாசமான பெண்ணைவிட
பணத்திற்கே இங்கு மகுசாச்சி
என்னை பெற்றவன் இங்கு
காணி வயல் வித்தாச்சி
எனக்கு மட்டும் ஏனோ
காலம் அமாவாசையாய் போயாய்ச்சி
எட்டடி ஆறடி வீடுதான் எனக்கு
எட்டிபார்க்கிறவன் கேட்பதோ
கோடி கணக்கு
நொண்டி நடக்கும் நெடுவன் கூட
என்னிடம் கேட்கிறான் ஐந்து பவுனு
ஆணாய் பிறந்தால்
அருகம்புல்லுக்கும் மதிப்பு
பெண்ணாய் பிறந்தால்
பன்னீருக்கும் சிலநேரம் இழிவு
இறைவன் மட்டுமே
அறிவான் அவனின் கணக்கு
பெண் மகள் பெற்ற ஆணுக்கு தெரியும்
எனது தவிப்பு ...............