சோகம்
இலங்கை எல்லையின் முதலே - எங்கள்
வாழ்வின் முடிவாய் போச்சு..
இரவில் சூரியன் உதிபதில்லை அகிலம் உணராது
கடலில் எல்லையும் தெரிவதில்லை கடந்து போயாச்சு
குண்டும் என்னுள்ளே பாய்கிறதே..
என்னுயிரும் என்னைவிட்டு பிரிகிரதே..
சாம்பல் ஆக வேண்டிய சடலம் இங்கே..
கடலில் கரைந்து தான் போகிறதே..
"நீரின் உள்ளே நீதியும் முழ்கி போயாச்சு..
கடலின் உள்ளே கடவுளும் கானல்நீராச்சு.."
வாழ்வில் பிழைக்க செய்யும் தொழிலோ வாழ்வின் பிழையாச்சு..
வாழ துடிக்கும் எங்கள் உயிரோ மீனின் உணவாச்சு....
வம்சம் வழிவந்த தொழில் இதுவே - எங்கள்
வம்சம் முடிவையும் கட்டியாச்சு
நிலத்து மனிதர்களின் வாய்ருசிக்கு - எங்கள்
குலத்து மனிதர்களின் உயிர் பரிபோயாச்சு
"காக்க வேண்டிய ராஜரீகம் - தினம்
சோகராகம் தான் பாடியாச்சு"
அரசி இருந்துமே என்ன பயன் ? (CM of TN)
அவல நிலையோ கண்முன் உதிசாச்சு..
"நீரின் உள்ளே நீதியும் முழ்கி போயாச்சு..
கடலின் உள்ளே கடவுளும் கானல்நீராச்சு.."