செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா
![](https://eluthu.com/images/loading.gif)
எதிர் பார்ப்புகள் ஏதுமின்றி
எழுத்து தளம் வந்தேன்
எண்ணங்களை பதிந்து வைக்க
எழுத்து களம் கொடுத்தது !
வாசிக்க வந்தவள் தான்
வசிக்கத் தொடங்கி விட்டேன்
வசியம் செய்தாற் போல்
வசமானேன் எழுத்து தளத்தில் !
தாயாய் தமக்கையாய்
தங்கையாய் தோழியாய்
உறவாய் புகுந்தேன்
உள்ளம் நிறைந்தேன் !
பார்வையில் படைப்புகள் பட்டால்
படித்து புள்ளிகள் கொடுப்பேன்
நடு நிலையாகத் திகழ்வேன்
நற்பெயர் நானும் எடுப்பேன் !
புரியாததும் புரிந்து கொள்வேன்
புதுப்புது படைப்புகள் பதிப்பேன்
சான்றோர் முன்வந்து கற்பிக்க
சந்தோஷமாய் கற்றுக் கொள்வேன் !
பாசம் காட்டிடும் அம்மாதான்
பார்வைகள் குறைந்ததில் வருத்தம்தான்
பதிந்த க(வி)தைகள் படித்துவிட்டு
பொன்னான வாக்கை எனக்களிப்பீர் ..!!
பரிசு பெற்றோர் பட்டியலில் -என்
படைப்புடன் பேர்வரச் செய்வீர்களா
செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா
செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா ...????
(பி .கு .)
இது தலைப்பின் ஈர்ப்பால் சும்மா எழுதியது !
பரிசு ஆசை எனக்கில்லை ...பதவி மோகம் துளியுமில்லை ...!!
இதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற கட்டாயமில்லை ...!!
கண்டும் காணாமலும் போகலாம் !
படித்தும் பாராமலும் போகலாம் ...!!